கள்ளக்குறிச்சி மாவட்ட துவக்க விழா நடைபெறும் இடத்தை கூடுதல் ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி, நவ. 20:    கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் துவக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவி  வழங்கும் விழா வருகிற 26ம்தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்சியில்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய மாவட்டத்தை மக்கள்  பயன்பாட்டிற்கு வரும் விதமாக துவக்கி வைக்க உள்ளார். இவ்விழா  கள்ளக்குறிச்சி-பெருவங்கூர் சாலை பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது.இதையடுத்து அங்கு விழா மேடை அமைக்கும் பணி கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியர் கிராண்குராலா தலைமையில் நேற்று  முன்தினம் துவங்கியது. இந்நிலையில் நேற்று விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர்  (வருவாய்) ஸ்ரேயாபிசிங், கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட துவக்க விழா நடைபெற  உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வரைபடத்தை  பார்வையிட்டு மேடை அமைக்கும் இடம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் நலத்திட்ட உதவி பெறும் பயனாளிகள் அமரும் இடம், விஐபி செல்லும் சாலை,  பொதுமக்கள் செல்லும் சாலை வசதிகள் மற்றும் விஐபி கார் பார்க்கிங் ,  பொதுமக்கள் கார் பார்க்கிங் வசதி அமைப்பது ஆகியவை குறித்து அதிகாரி
களிடம்  கேட்டறிந்தார். மேலும் பயனாளிகளுக்கு தேவையான குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என வருவாய்துறை அலுவலர்களுக்கு  அறிவுறுத்தினார்.அப்போது கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் காந்த்,  தாசில்தார் ராஜசேகர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் கவுதமன்,  சத்தியபிரியா, சர்மா, மண்டல துணை வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன், தேர்தல் தனி  துணை வட்டாட்சியர் குமரன்,
வருவாய் ஆய்வாளர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர்  திவ்யபாரதி ஆகியோர் உடனிருந்தனர்.


Tags : Collector ,location ,Kallakurichi District Opening Ceremony ,
× RELATED திருவண்ணாமலையில் தொடர்...