×

எசனூர் ஊராட்சியில் வெள்ளாற்றில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

முஷ்ணம், நவ. 20: முஷ்ணம் அருகே எசனூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியை ஒட்டி வெள்ளாறு உள்ளது. இந்த வெள்ளாற்றில் அரசு மணல் குவாரியில் லாரிகள் மூலம் பலமுறை மணல் அள்ளியதால் ஆற்றில் மணல் இன்றி கருவேல மரங்கள் அதிக அளவில் முளைத்துள்ளது. தற்போது போதிய பருவமழையின்றி வெள்ளாற்றில் தண்ணீர் வராமல் உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறையவாய்ப்பு உள்ளது. விவசாய பம்பு செட்டுகளில்  போர்வெல் மட்டம் அகல பாதாளத்தில் செல்லும் நிலை உள்ளது. இப்பகுதி ஆற்றின் கரை பகுதியில் பக்கவாட்டு தடுப்புசுவர் அமைக்க வேண்டி பலமுறை இப்பகுதி விவசாயிகள் பொதுப்பணித்துறைக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வெள்ளாற்றில் உள்ள கருவேல மரங்களை வேரோடு அகற்றியும், ஆற்றில் பக்கவாட்டு தடுப்பு சுவர் அமைத்து கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : removal ,Essanur ,
× RELATED கொடைக்கானல் மலைச்சாலையில் சாய்ந்து...