×

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

விருத்தாசலம், நவ. 20: விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் 8 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனைக் கண்ட அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து விருத்தாசலம் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்ததன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரமாக போராடி, இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் மறைந்திருந்த அந்த சாரைபாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் பிடிபட்ட பாம்பை பாதுகாப்புடன் கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர். இச்சம்பவத்தால் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED திருவில்லிபுத்தூர் அருகே கோழி...