×

தீ விபத்தில் டீக்கடை எரிந்து சேதம்

வடலூர், நவ. 20: வடலூர்- சிதம்பரம் சாலையில் டீ கடை உள்ளது. இந்த கடையில் நேற்று கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்தது. இதை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் டீ கடை அருகில் உள்ள ஓட்டலில் வைக்கப்பட்டு இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பரவி கடையில் உள்ள பொருட்கள் தீப்பற்றி எரிந்தது. இதனால் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில் கடையின் உள்ளே இருந்த டீ கடை உரிமையாளர் நாராயணன் மனைவி பிரேமா கடையின் உள்ளே மாட்டிக்கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து உள்ளே சிக்கி கொண்ட பிரேமாவை மீட்டனர். பின்னர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து சிலிண்டர்களை வெளியேற்றினர். அப்போது தீயை அணைக்க முயன்றபோது டீ மாஸ்டருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. இருந்தும் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Dekkady ,
× RELATED காரில் திடீர் தீவிபத்து