×

சம்பா நெற்பயிரில் குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

அரியலூர், நவ.20: சம்பா நெற்பயிரில் குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரி ஆலோசனை வழங்கியுள்ளார். இது குறித்து வேளாண்மை உதவிஇயக்குநர் ெவளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
அரியலூர் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிரில் தற்போதைய தட்ப வெப்பசூழ்நிலைகளின் காரணமாக குலைநோயின் தாக்குதல் தென்படுகிறது. இந்நோயினை வராமல் தடுப்பது பற்றியும் நோய் வந்துவிட்டால் பயிரை பாதுகாக்கும் வழிமுறைகள்: சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிரில் சி.ஆர் 1009, சி.ஆர் 1009சப் 1, திருச்சி 3, பிபிடி 5204, கோ.ஆர்50 மற்றும் டிகேஎம் 13, ஆடுதுறை 39 முதலிய ரகங்கள் உள்ளது. இவற்றில் பிபிடி 5204 ரகம் எளிதில் குலைநோய் தாக்குதலுக்கு இலக்காகும் ரகமாகும். சன்னரகம் என்பதாலும் அறுவடை நேரத்தில் தனியார் வியாபாரிகளுக்கு நல்ல விலைக்கு களத்து மேட்டிலேயே விற்பனை செய்திட முடியும் என்பதாலும் விவசாயிகள் இந்த ரகத்தினை தொடர்ந்து சாகுபடி செய்கின்றனர்.இரவு நேரத்தில் பனிப்பொழிவும் குறைந்த வெப்பநிலை நிலவுவதால் இந்த நோயினைஉண்டாக்கும் பூசண வித்துக்கள் முளைத்து உடன் நோயினை உண்டாக்கு கின்றன. அறிகுறிகள்: பயிரின் இலையில் கண் வடிவ புள்ளிகள் தோன்றும், புள்ளியின் மையபகுதியில் சாம்பல் நிறத்திலும் விளிம்புகள் கரும்பழுப்பு நிறத்திலும் இருக்கும்.இந்நோய் வெகுவேகமாக பரவக் கூடியதாகையால் ஒரிரு நாட்களிலே பெரிய அளவில் பயிரில் சேதத்தினை உண்டாக்க கூடியது. இதன் விளைவாக பயிர் தோகை எரிந்து போனது போல் ஆகிவிடும். கட்டுப்படுத்தாமல் விட்டால் கதிர் வராது. கதிர் வந்தாலும் நெல் மணிகள் நோயால் பாதிக்கப்பட்டு நெல்மணிகளின் எடையும் தரமும் குறையும்.பதர் அதிகம் உண்டாகும்.பயிர் கதிர்வரும் தருணத்தில் கதிரின் கழுத்துபகுதியில் கரும்புள்ளி உண்டாகி கதிர்பட்டுப் போகும்.நெற்பயிரில் அதிகமகசூல் இழப்பை ஏற்படுத்தும்.

இந்த நோயினைதவிர்க்க வருமுன் காப்பது மிகவும் சிறந்தது.வரிசை நடவு செய்வதும் பாத்திகளுக்கு இடையில் இடைவெளி விட்டு நடவு செய்வதும் தழைசத்து உரமானயூரியா உரத்தினை சீராக வேப்பம்புண்ணாக்கு கலந்து இடுவதும் இந்நோய் வராமல் தடுக்கும் வழிகளாகும். இந்நோயை உண்டாக்கும் நோய்கிருமி வயலின் வரப்புகளில் உள்ள புல்லில் தங்கி இருப்பதால் வயல் வரப்புகளை புல் இல்லாமல் சுத்தமாக வைத்திருத்தல் அவசியம். குறிப்பாக பிபிடி 5204 சாகுபடி செய்திருக்கும் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு 500 கிராம் சூடோனமாஸ் நுண்ணுயிரியை சாணிப்பால் அல்லது புளித்த தயிரில் கலந்து ஏக்கருக்கு 200 லிட்டர் நீர் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்தால் இந்நோய்வராமல் தடுக்கலாம். இந்நோய் தாக்குதலின் அறிகுறிகள் தென்பட்டால் தாமதமின்றி கீழ்கண்ட மருந்துகளில் ஏதாவது ஒன்றினை தெளித்து கட்டுப்படுத்தலாம். டிரைசைக்கிலசோல் 120கிராம், ஏக்கர் அல்லது புரபிகோனசோல் 200 மிலி, ஏக்கர் அல்லது ஹெக்சகோனசோல் 250 மிலி, ஏக்கர் தெளித்து நோயினை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு உதவி இயக்குனர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.வேளாண் அதிகாரிஆலோசனைஇந்நோய் வெகுவேகமாக பரவக் கூடியதாகையால் ஒரிரு நாட்களிலே பெரிய அளவில் பயிரில் சேதத்தினை உண்டாக்க கூடியது. இதன் விளைவாக பயிர் தோகை எரிந்து போனது போல் ஆகிவிடும். கட்டுப்படுத்தாமல் விட்டால் கதிர் வராது. கதிர் வந்தாலும் நெல் மணிகள் நோயால் பாதிக்கப்பட்டு நெல்மணிகளின் எடையும் தரமும் குறையும்.

Tags :
× RELATED பருவமழை தொடங்க உள்ளதால் சென்னையில் 105...