×

ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம்

ஜெயங்கொண்டம், நவ. 20: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தெற்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் குமார் தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை வழங்கினர். மாவட்ட பொருளாளர் பொய்யாமொழி, ஜெயங்கொண்டம் நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பிரிதிவிராஜன், சங்கரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Jayankondam Southern Union DMK Activists Meeting ,
× RELATED பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில்...