×

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அரியலூரில் ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கம்

அரியலூர், நவ. 20: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கம் வரும் 26, 27ம் தேதிகளில் நடக்கிறது. இந்த வாய்ப்பை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சிமொழி பயிலரங்கம், ஆட்சிமொழி கருத்தரங்கம் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 26, 27ம் தேதிகளில் நடக்கிறது. 26, 27ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கம் நடக்கிறது. 27ம் தேதி மாலை 3.30 மணி முதல் ஆட்சிமொழி கருத்தரங்கம் தமிழ் வளர்ச்சி இயக்குநர் மற்றும் கலெக்டர் தலைமையில் நடக்கிறது. மாவட்ட வருவாய் அலுவலர் பயிலரங்க தொடக்க உரையாற்றுகிறார்.

இதைதொடர்ந்து பயிலரங்கில் ஆட்சிமொழி வரலாறு சட்டம், ஆட்சிமொழி செயலாக்க அரசாணைகள், மொழிபெயர்ப்பு கலைச்சொல்லாக்கம், அலுவலக குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், மொழிப்பயிற்சி, ஆட்சிமொழி ஆய்வும் குறைகளைவு நடவடிக்கைகளும் ஆகிய 6 தலைப்புகளில் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.கலெக்டர் மற்றும் தமிழ் வளர்ச்சி இயக்குனர் ஆட்சிமொழி திட்ட செயலாக்க விளக்க உரையாற்றுகின்றனர். ஆட்சிமொழி கருத்தரங்கம் குறித்து அரசு அலுவலர்கள், தமிழறிஞர்கள் கருத்துரையாற்றுகின்றனர். எனவே அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழி செயலாக்கத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு அலுவலர்கள், பணியாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அரியலூர் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Language Development Workshop and Symposium ,Ariyalur ,
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...