×

கருத்துக்கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் வெளிநடப்பு

பெரம்பலூர்,நவ.20:வாரச்சந்தை நாளில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் விதமாக டிஎஸ்பி நடவடிக்கையால் டூவீலர் பார்க்கிங் வசதி தயார் ஆனது.பெரம்பலூர் நகராட்சிக்கான வாரச்சந்தை பெரம்பலூர் துறையூர் சாலையில், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையின் கிழக்குப்பகுதியில் இருந்த இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் நிலத்தில் 40ஆண்டுகளாக இயங்கி வந்தது.கடந்த 3வருடங்களுக்கு முன்பு அரசுத்தலைமை மருத்துவமனை விரிவாக்கப் பணிகளுக்காக அந்த நிலம் மாவட்ட நிர்வாகத் தால் கையகப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது பெரம்பலூரில் 6மாடிக் கட்டிடமாக பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இப்பகுதியிலே 40ஆண்டுகளாக இயங்கி வந்த செவ்வாய் வாரச்சந்தை வடக்குமாதவி சாலையில் உழவர் சந்தையை ஒட்டி தென்புறத்தில், அதே இந்துசமய அறநிலை யத்துறைக்குச் சொந்தமான காலிமனையில் அமைக்க ஏற்பாடு செய்யப் பட்டது. இடம் கோயிலுக்குச் சொந்தமான இடமென்பதால் நகராட்சியின் தயவை நாடாமல் வாரச்சந்தை நடப்பதால் தனியாருக்கு ஏலமாக விடப்பட்டு வாரச் சந்தை நடந்து வருகிறது. இதனால் நகராட்சி நிர்வாகம் வாரச்சந்தைத் திடலை கண்டுகொள்வதே இல்லை. செவ்வாய் வாரச் சந்தை வந்தபிறகு, பெரம்பலூர் டவுன் போலீஸ் நிலையத்திலிருந்து செல்லும் வடக்குமாதவி சாலை செவ்வாய்க் கிழமை என்றாலே போக்குவரத்து நெருக்கடி யில் சிக்கித் தவிப்பது வழ க்கமாகி விட்டது. குறிப்பாக பள்ளிப் பேருந்துகள், காய்கறி வாகனங்கள், கனரக வாகனங்கள், மினிபஸ்க ளுக்கு இடையேதான் அப்ப குதி மக்களும், வாரச்சந் தைக்கு காய்கறி வாங்கச் செல்வோரும் வந்துசெல்ல வேண்டும்.

இதற்குத் தீர்வு காண வேண்டும் என தினகரன் நாளிதழ் அடிக்கடி சுட்டிக் காட்டி செய்தி வெளியிட்டு வந்தது. இந்நிலையில் பெரம்பலூர் சட்டம் ஒழுங்கு டிஎஸ்பியாகப் பொறுப்பே ற்றுள்ள கென்னடி நேற்று அதிரடியாக வாரச்சந்தை பகுதியை ஆய்வுசெய்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பார்க்கிங் வசதி செய்துகொடுத் தால் பெரும்பாலான நெரு க்கடிகள் குறைந்துபோகும் என தெரியவந்தது.இதையடுத்து நேற்று மதன கோபாலசுவாமி கோயில் செயல் அலுவலர் மணியிடம் அவர்கள் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தில் வாரச்சந்தை பகுதிக்கு முன்புறம் 50செண்டு நிலத்தில் டூவீலர் பார்க்கிங் வசதி செய்து கொடுக்க உத்தரவிட்டார்.இத னைத் தொடர்ந்து நேற்று பார்க்கிங் வசதி தூய்மை செய்து தரப்பட்டது. இதற்கு வாகன ஓட்டிகள், வாரச்சந்தை வியாபாரிகள் காவல் துறை அதிகாரிகளுக்கும், இந்துசமய அறநிலையத் துறை செயல் அலுவலருக் கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.டிஎஸ்பி அதிரடி நடவடிக்கை

Tags : walkout ,opinion meeting ,
× RELATED இந்தியா ஒற்றுமை நடைப்பயணத்தின் 100-வது...