×

விண்ணப்பிக்க 28ம் தேதி கடைசி 4 பேரூராட்சிகள் சார்பில் உலக கழிவறை தினம் கடைபிடிப்பு

பெரம்பலூர்,நவ.20: பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 4 பேரூராட்சிஅலுவலகங்கள் சார்பாக உலகக் கழிவறை தினம் கடைபிடிக்கப்பட்டது. கழிப்பறைகள் சுத்தப்படுத்தப்பட்டன. விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.நவம்பர் 19ம்தேதியை உலகக் கழிவறை தினமாக அறிவித்திருப்பதால், நேற்று பெரம்பலூர் கலெக்டர் சாந்தா மற் றும் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் (திருச்சி) முத் துக்குமார் ஆகியோரது அறிவுறுத்தலின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள குரும்பலூர், லெப் பைக் குடிகாடு, அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சி அலுவலகங்கள் சார்பாக உலக கழிவறை தினத்தை யொட்டி துப்புரவுப் பணியா ளர்களைக் கொண்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இதன்படி பெரம்பலூர் தாலுகா, குரும்பலூர் பேரூராட்சியில், நேற்று உலக கழிவறை தினம் பேரூராட்சி செயல்அலுவலர் சதீஷ் கிருஷ்ணன் தலைமையில் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குரும்பலூர், பாளையம், ஈச்சம்பட்டி பகுதிகளில் உள்ள அனைத்து பொது சுகாதார வளாகங்கள், சமுதாய கழிப்பிடங்கள் மற்றும் குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆகியவற்றிலுள்ள கழிவறைகள் பேரூராட்சியின் துப்புரவு பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்யப் பட்டது. மேலும் பொதுமக்களிடையே திறந்தவெளியில் மலம் கழித்தல் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தனி நபர் இல்ல கழிவறைகள் இல்லாத வீடுகளில் கழிவறைகள் அமைக்கவும், கழிவறை கட்ட போதிய இடவ சதி இல்லாதவர்கள், தங் கள் பகுதியில் உள்ள பொது சுகாதார கழிவறையினை பயன்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது. கழிப்பறை பயன்படுத்துவதுடன், கை, கால்களை சுத்தமாக கழுவு தல் மற்றும் இதர சுகாதார பழக்கங்கங்கள் கடைபிடித்தலுக்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வீடுவீடாக விநியோகம்செய்யப்பட்டது. இப்பணிகளில் 31துப்புரவுப்பணியாளர்களுடன், பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்கிருஷ் ணன் தலைமையில் இளநிலை உதவி யாளர்கள் சாந் தி, மஞ்சுளா, பொதுசுகாதார மேற்பார்வையாளர் சிவக்குமார், அலுவலக உதவியாளர் ராஜ்குமார் கலந்து கொண்டனர்.

இதேபோல் குன்னம் தாலுகா, லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் 30துப்புர வுப் பணியாளர்களுடன் பேரூராட்சி செயல்அலுவலர் சின்னசாமி தலைமையில், இளநிலை உதவியாளர் ராணி, வரித்தண்டலர் செந்தில்குமார், குமார் உள்ளிட்டோரும் பங்கேற்ற உல கக் கழிவறை தினம் தூய்மைப் பணிகளுடன் கடைபிடிக்கப்பட்டது.விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டது.வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூர் பேரூராட்சி யில் 30துப்புரவுப் பணியாளர்களுடன் பேரூராட்சி செயல்அலுவலர் கண்ணன் தலைமையில், இளநிலை உதவியாளர் சரண்ராஜ், வரித் தண்டலர் சாந்தி உள்ளிட்டோரும் பங்கேற்ற உலகக் கழிவறை தினம் தூய்மைப் பணிகளுடன் கடைபிடிக்கப் பட்டது.விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டது.பூலாம்பாடி பேரூராட்சியில் 30 துப்புரவுப்பணியாளர்களுடன் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்கிருஷ்ணன் தலைமையில், இளநிலை உதவியாளர் மணிமேகலை, வரித் தண்டலர் ஜான்ஜோசப் உள்ளிட்டோரும் பங்கேற்ற உலகக் கழிவறை தினம் தூய்மைப் பணிகளுடன் கடைபிடிக்கப்பட்டது.விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.

Tags : World Toilet Day ,parties ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...