×

போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு பெரம்பலூர் வடக்குமாதவி வாரச்சந்தையில் டூவீலர் பார்க்கிங் வசதி தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியோருக்கு கபீர் புரஸ்கார் விருது வழங்கல்

பெரம்பலூர், நவ. 20: பெரம்பலூர் மாவட்டத்தில் சமுதாய நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் “கபீர் புரஸ்கார் விருது” பெற விண்ணப்பிக்க வரும் 28ம் தேதி கடைசி நாளாகும்.பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் சாந்தா தகவல். இதுகுறி த்து அவர் வெளி யிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:நமது தேசத்துக்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டி தரும் வகையில் சமுதாய நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு இந்திய அரசு ஆண்டுதோறும் கபீர் புரஸ்கார் விருது வழங்கி வருகிறது.

அதன்படி 2019-2020ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருது பெற வருகிற 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான . gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2019-2020ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கான விண்ணப்பம் என குறிப்பிட்டு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உறுப்பினர்- செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116-ஏ, ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நேருபூங்கா சென்னை - 600 084 என்ற முகவரிக்கு வருகிற 28ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Best Employers for Promoting National Integration of Two-wheeler Parking Facility ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்