×

ஆறுபாதி கிராமத்தில் டெங்கு அறிகுறி

மயிலாடுதுறை, நவ.20: நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அடுத்து ஆறுபாதி கிராமத்தில் ஒருவருக்கு டெங்கு அறிகுறி தெரிந்ததையெடுத்து சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து களப்பணி செய்தனர்.ஆறுபாதி கிராமம் உதயசூரியன் தெருவில் ஒருவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்தது. திருப்பூரில் வேலை செய்து வரும் இவருக்கு அங்கு காய்ச்சல் இருந்த நிலையில், சொந்த ஊரான ஆறுபாதியில் வந்து சோதனை செய்தார். அப்போது டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது. உடனே ஆக்கூர் வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக்சந்திரகுமார் தலைமையில் உடனே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அப்பகுதியில் டெங்கு களப்பணி நடைபெற்றது. இதில் இப்பகுதியில் நடமாடும் மருத்துவ ஊர்தி மூலம் மருத்துவர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு இரத்த சோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து கொசு மருந்து அடிக்கப்பட்டு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது. இதில் சுகாதாரத் மேற்பார்வையாளர்கள் வெங்கடேசன், குணசேகரன் சுகாதாரத் ஆய்வாளர்கள் தர், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், பழனிதாஸ், லெஷ்மணன், சீனிவாச பெருமாள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். மேலும் டெங்கு பரவாமல் இருக்க தேவையற்ற பொருட்களை களப்பணியாளர்கள் கொண்டு அகற்றினர்.

Tags : Arafati Village ,
× RELATED காரைக்கால் மாவட்டத்தில் 62 பேர் டெங்கு...