×

வேதாரண்யம் அடுத்த கத்தரிப்புலத்தில் மண் சாலை தார் சாலையாக அமைக்கும் பணி மும்முரம்

வேதாரண்யம், நவ.20: வேதாரண்யம் அடுத்த கத்தரிப்புலத்தில் மண்சாலை தார் சாலையாக அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கத்தரிப்புலம் ஊராட்சியில் சுமார் 1000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் ஆசாரி வீடு முதல் குளுந்தான் வீடு வரை உள்ள ஒன்றரை கிலோ மீட்டர் சாலை பல தலைமுறைகளாக மண்சாலையாக இருந்து வந்தது. இந்த சாலையை தார்சாலையாக தரம் உயர்த்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுளாக கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் அமைச்சர் அமைச்சர் ஓ.எஸ்.மணியனை சந்தித்து இப்பகுதி மக்கள் சந்தித்து இதுபற்றி கோரிக்கை விடுத்தனர்.இக்கோரிக்கையினை ஏற்று மாவட்ட நிர்வாகத்திற்கு அமைச்சர் பரிந்துரை செய்து முதல் கட்டமாக மண்சாலையை மாற்றி கருங்கல் ஜல்லி சாலையாக அமைக்க ரூ.31 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பபட்டது. இந்த சாலை அமைப்பதற்கு முதற்கட்ட பணியாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பணியாளர்களை கொண்டு ரூ. 6.5 லட்சம் ஊதியம் வழங்கவும் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. கிராமச் சாலையை கிராம மக்களை கொண்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Tags : road ,mud road tar road ,Vedaranyam ,
× RELATED விருதுநகரில் பரிதாப நிலையில்...