×

கீழ்வேளூர் கடைத் தெருவில் மக்களை அச்சுறுத்தும் சிதிலமடைந்த மின்கம்பம் புதிதாக மாற்ற வலியுறுத்தல்

கீழ்வேளூர், நவ.20:கீழ்வேளூர் கடைத்தெருவில் மக்களை அச்சுறுத்தும் சிதிலமடைந்த மின்கம்பத்தை புதாதாக மாற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கீழ்வேளூர் கடைத் தெருவில் நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையுடன் கச்சனம் சாலை இணையும் இடத்தில் உள்ள மின்கம்பம் சிதிலமடைந்து உள்ளது. சிமென்ட் பூச்சுகளை பெயர்ந்து சாய்ந்தும், எப்பாது வேண்டுமானாலும் விழும் அபாயத்தில் உள்ளது. கச்சனம் சாலை சந்திப்பு எந்த நேரமும் மக்கள் அதிகம் கூடும் இடமாக உள்ளது. இந்த இடத்தில் உள்ள மின் கம்பத்தில் தெரு விளக்கு மற்றும் கடைகளுக்கு மின் இணைப்பு மற்றும் தெரு விளக்கு சுவிட் போர்டும் உள்ளது. இந்த மின் கம்பம் வழியாக கடைத் தெருவின் பகுதிக்கு மின்சாரம் செல்கிறது.

தற்போது இந்த மின்கம்பம் பழுது அடைந்து சிமென்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிவதுடன் வலுவிழந்து தற்போது மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. கடைத் தெருவின் முக்கிய பகுதியில் எந்த நேரமும் மக்கள் அதிகள் கூடும் இடத்தில் உள்ள மின் கம்பம் சாய்ந்து விபத்துகளை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. மின் கம்பம் பழுதாகியுள்ளதால் அந்த மின் கம்பத்தில் இருந்து கடைகளுக்கு இனைப்பு பெற்றவர்கள் மின் இணைப்பில் பழுது ஏற்பட்டால் அதை மின் கம்பத்தில் ஏறி சரி செய்ய கடை உரிமையாளர்கள் மின் கம்ப உயரத்திற்கு இரண்டு, மூன்று ஏணியை தயார் செய்து கொடுத்தால் தான் மின் ஊழியர்கள் சரி செய்ய வருகிறார்கள்.மேலும் அந்த மின் கம்பத்தில் உள்ள தெரு விளக்குகளையும் பராமரிக்க முடியாததால் கடந்த ஓர் ஆண்டாக மின் விளக்கும் எரிய வில்லை. உடன் மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுத்து விபத்துகள் நடைபெறுவதற்கு முன் மின் கம்பத்தை புதிதாக மாற்றிட வேண்டும் என்றும் அப் பகுதி வர்த்தகர்களும், பொது மக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Keewalloor Shopping Street ,
× RELATED லஞ்சம் வாங்கிய குடிசை மாற்று வாரிய அதிகாரி உட்பட 2 பேர் கைது