×

விவசாயிகள் எச்சரிக்கை மேலகோட்டைவாசலில் வலுவிழந்த பாலம் சீரமைக்கப்படுமா?

நாகை, நவ.20: நாகையில் வழுவிழந்து இருக்கும் மேலகோட்டைவாசல் பாலத்தை சீர் செய்ய வேண்டும் என்று நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.நாகை நகர பகுதியின் நுழைவு வாயில் மேலகோட்டைவாசல் பாலம் ஆகும். உப்பனாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த பாலம் வழியாகதான் எல்லா வாகனங்களும் வரவேண்டும். நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் இந்த பாலம் தற்பொழுது வலுவிழந்து எப்பொழுது வேண்டும் என்றாலும், இடிந்து விழும் நிலையில் உள்ளது. நாகை நகர பகுதிக்குள் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. அப்படி இருக்கும்போது இவ்வாறு வழுவிழந்த நிலையில் இருக்கும் பாலத்தை யாருமே கண்டு கொள்ளாமல் இருப்பது விரைவில் மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்தும்.எனவே இந்த பாலத்தை சீர் செய்வதுடன் அருகில் புதிதாக பாலத்தை கட்டினால் எதிர்காலத்தில் மிகவும் பயன் நிறைந்ததாக இருக்கும் என்று நாகை நகர பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : bridge ,Melakottaivasal ,
× RELATED கனமழை எச்சரிக்கை விவசாயிகள் ஆயத்த நிலை ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்