×

உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெறுவது ஸ்டாலின் முதல்வராவதற்கு அச்சாணி

நாகை, நவ.20: உள்ளாட்சி தேர்தலின் அதிக இடங்களில் பெறும் வெற்றி திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க அச்சாணியாக அமையும் என்று முன்னாள் அமைச்சர் மதிவாணன் கூறினார்.நாகை நகர திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நாகையில் நடந்தது.நகரச் செயலாளர் பன்னீர் தலைமை வகித்தார். நகர நிர்வாகிகள் வீராசாமி, லோகநாதன், ரமணி, சிவா, திலகர், சித்ராகுலோத்துங்கன், அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் சிறப்புரையாற்றினார். முன்னாள் அமைச்சர் மதிவாணன் பேசியதாவது:உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் வரை சென்று நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு அதிமுக அரசு தான் காரணம். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று அறப்போராட்டம் நடத்தியன் பயனாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான தேதியை அறிவிப்பதாக மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆளும் கட்சியைச் சேர்ந்த அதிமுக உள்ளாட்சி தேர்தலுக்கு எந்த அளவிற்கு தயாராக இருக்கிறதோ அதை விட பல மடங்கு தயாராக திமுக இருக்கிறது. வார்டு மறு சீராய்வுக்கு பின்னர் அந்த வார்டுகளில் உள்ள வாக்காளர்களை சந்திக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுகிறது. எனவே வார்டு மறு சீராய்வுக்கு பின்னர் அந்த வார்டுகளில் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர். புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் யார்? நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் யார்? இடம் மாறுதல் அடைந்த வாக்காளர்கள் யார்? என்பது குறித்து முதலில் நாம் கள ஆய்வு செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தல் வெற்றி என்பது 1 வாக்குகளை வைத்து கூட நிர்ணயம் செய்யும்.

எனவே வார்டு வாரியாக சென்று வாக்காளர்களை சந்திக்க வேண்டும். அதிமுகவினர் ஆளும் கட்சியாக இருப்பதால் எளிதில் வாக்காளர்களை கவர முடியும். ஆனால் திமுகவை சேர்ந்தவர்கள் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். என்பதை யாராலும் மறக்க முடியாது. உள்ளாட்சி தேர்தலின் அதிக இடங்களில் பெறும் வெற்றி திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க அச்சாணியாக அமையும். எனவே இந்த உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை பிடிக்க நாம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். நம்மிடம் விட்டு கொடுத்து செல்லும் மனபக்குவதை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வார்டுகளில் யார் நின்றாலும் நமது கட்சிகாரர் தான் நிற்கிறார். தலைமை அறிவித்த வேட்பாளர் தான் நிற்கிறார் என்ற எண்ணத்தோடு பணியாற்ற வேண்டும். அப்போது தான் உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களை பிடிக்க முடியும் என்றார்.மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மேகநாதன், ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன், மாவட்ட சார்பு அணியினர் முருகையன், தர், மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். நகர துணைச் செயலாளர் சிவா நன்றி கூறினார்.

Tags : DMK ,elections ,government ,
× RELATED வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக...