×

சீர்காழியில் தேசிய நூலக வாரவிழா

சீர்காழி, நவ.20: சீர்காழி காமராஜர் வீதியில் உள்ள கிளை நூலகத்தில் 52வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை வாசகர் வட்டமுடன் இணைந்து கிளை நூலகத்தினர் கொண்டாடினர். விழாவையொட்டி சீர்காழி கிளை நூலகத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. வாசகர் வட்ட தலைவர் வீரசேனன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட சிறப்பு ஆலோசகர் தங்கவேலு முன்னிலை வகித்தார். சீர்காழி நகர வர்த்தக சங்கத் தலைவர் சிவசுப்ரமணியன் புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து நூல் நிலையத்தின் அவசியம் பற்றியும், வாடகை கட்டிடத்தில் இயங்கும் நூலகத்தை அதற்கென அரசால் ஒதுக்கப்பட்ட இடத்தில் சொந்தக் கட்டிடத்தில் மாற்றுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வதாக உறுதியளித்தார். துளிர் அறிவியல் இயக்கப் பொறுப்பாளர் நந்தா ராசேந்திரன் மற்றும் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர் பாபு நேசன் ஆகியோர் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தினர். முன்னதாக கிளை நூலகர் விஜய் வரவேற்றார் விழாவில் திரளான பள்ளி மாணவ, மாணவிகளும், வாசகர்களும் வாசகர் வட்டப் பொறுப்பாளர்களும் விழாவில் பங்கு கொண்டு சிறப்பித்தனர் முடிவில் நூலக பணியாளர் ரகு நன்றி கூறினார்.

Tags : National Library Weekly ,
× RELATED தேசிய நூலக வாரவிழா பேச்சு போட்டியில்...