×

அகற்ற கோரிக்கை காப்பகத்தில் ஒப்படைக்க வலியுறுத்தல் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் நெற்பயிர்களில் இலை சுருட்டுப் புழு தாக்குதலை தடுக்க மருந்து தெளிப்பு விவசாயிகள் தீவிரம்

சீர்காழி, நவ.20:சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் நெற்பயிர்களில் இலை சுருட்டுப்புழு தாக்குதலை தடுக்க மருந்து தெளிப்பு பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளான வைத்தீஸ்வரன்கோயில், கதிராமங்கலம், எடக்குடி, வடபாதி, தென்னலக்குடி, காத்திருப்பு, அல்லி விளாகம், நாங்கூர், திருவெண்காடு, நெய்தவாசல், கீழ சட்டநாதபுரம், காவளம்பாடி, திருவாலி கீழச் சாலை, புதுத்துறை, நெப்பத்தூர், திருநகரி, ஆதமங்கலம், பெருமங்கலம், கொண்டல், ஆதமங்கலம், வள்ளுவக்குடி, அகணி, நிம்மேலி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து காணப்படுகிறது கடந்த சில நாட்களாக மழை விட்டிருந்த நிலையில் விவசாயிகள் களையெடுக்கும் பணியிலும் அடி உரம் மேலுரம் இடும் பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையில் பெரும்பாலான இடங்களில் நெற்பயிர்களில் இலை சுருட்டு புழு அதிக அளவில் நெற்பயிர்களை தாக்கி வருகின்றன. இதனை அறிந்த விவசாயிகள் பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இதுகுறித்து கீழ சட்டநாதபுரம் விவசாயி நெடுஞ்செழியன் கூறுகையில்,சீர்காழி பகுதிகளில் இந்த ஆண்டு மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும் உரிய காலங்களில் மழை பெய்தாலும் நடவு செய்த சம்பா நெற்பயிர்கள் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான இடங்களில் இலை சுருட்டுப்புழு நெற்பயிர்களை தாக்கி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த விவசாயிகள் ஆட்களை கொண்டு பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. இலை சுருட்டுப் புழுவை தடுக்காவிட்டால் மகசூல் வெகுவாக குறைய வாய்ப்பு ஏற்படும். அதனால் விவசாயிகள் இலை சுருட்டு புழுவை கட்டுப்படுத்த பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன என்றார்.

Tags : Introduction ,rice paddy areas ,leaf curl attack ,
× RELATED பெண்களின் உடல்நலத்திற்காக...