×

கரூர் தாந்தோணிமலையில் இன்று முதல் அவ்வப்போது மின்தடை ஏற்படும் பகுதிகள்

கரூர், நவ. 20: மின்சாரவாரிய செயற்பொறியாளர் செந்தாமரை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கரூர் தாந்தோணிமலைக்குட்பட்ட சில பகுதிகளில் உயர் மின்அழுத்த பாதையின் மின்கம்பிகளை மாற்றியமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அதிகரித்து வரும் மின்தேவை மற்றும் மின்அழுத்த குறைபாடுகளை சரிசெய்ய கருப்பகவுண்டன்புதூர் பிரிவுக்கு தனியாக மின்பாதை அமைக்க மேம்பாட்டுபணிகள் நடைபெற்று வருகிறது. எனவே கீழ்கண்ட பகுதிகளுக்கு ஒருவார காலத்திற்கு மின்சாரம் 20ம் தேதி முதல் அவ்வப்போது மின் தடங்கல் ஏற்படும். மலைப்பட்டி, ராமச்சந்திரபுரம், கருப்பகவுண்டன்புதூர்., சுங்ககேட், காளியப்பனூர், கணபதிபாளையம், முத்துலாடம்பட்டி, திண்ணப்பா நகர், திண்ணப்பா நகர் விஸ்தரிப்பு, தமிழ்நாடு அரசு குடியிருப்பு கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் காந்திகிராமம் பகுதிகள். எனவே மேற்குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் மின்தடங்கலுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தாழ்வான பகுதிகளில் வசிப்போர்