×

கிருஷ்ணராயபுரம் ஆலமரத்துப்பட்டியில் இந்திராகாந்தி பிறந்த நாள் விழா

குளித்தலை, நவ. 20: கரூர் மாவட்டம கிருஷ்ணராயபுரம் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102வது பிறந்த நாள் விழாஆலமரத்துப்பட்டி யில் நடைபெற்றது விழாவிற்கு கிருஷ்ணராயபுரம் கிழக்கு வட்டார தலைவர் புதினா சரவணன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மணி, மாவட்ட வர்த்தக அணி தலைவர் சதீஷ், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாவட்ட தலைவர் சின்னசாமி ஆகியோர் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.இதில் வட்டார தலைவர்கள் ராஜேந்திரன், தமிழ்ச்செல்வன், மாவட்ட துணை தலைவர் குமார், இலக்கிய அணி பாண்டியன், சேவா தளம் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் கவுன்சிலர் பழனியம்மாள் வரவேற்றார். முடிவில் சேது நன்றி கூறினார்.

Tags : Birthday ,Indra Gandhi ,Krishnarayapuram ,
× RELATED பிரபல ரவுடியுடன் பிறந்த நாள் கொண்டாடிய இன்ஸ்பெக்டர்