×

உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் குளித்தலை நகரின் முக்கிய பிரச்னைகள் குறித்து தீர்மானம்

குளித்தலை, நவ. 20: குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக எதிர் வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக நிர்வாகிகள் கூட்டம் பெரியார் நகரில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் குளித்தலை நகரின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.குளித்தலையில் கதவணை அமைக்க ரூ.50 லட்சம் ஆய்வுக்காக நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசிற்கு குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக நன்றி தெரிவிப்பது. மேலும் நகராட்சியாகக் குளித்தலை தரம் உயர்த்தப்பட்டு 25 ஆண்டுகளான நிலையிலும், நிரந்தர பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை. இந்த நகராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிலையம் உருவாக்கப்பட வேண்டும்.

குளித்தலையில் ரயில்வே கேட், அண்ணாநகர் உழவர்சந்தை வழியாக அடைக்கப்பட்ட சாலையை நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு உடனடியாக உரிமையாளருக்கு உரிய தொகையைச் செலுத்தி பாதையை மீட்டெடுத்து மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். அதேபோல் குளித்தலை நகரில் தீயணைப்பு நிலையம் அமைத்துத் தர வேண்டும்.குளித்தலை நகரில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.குளித்தலை நகரத்துக்கு எனத் தனியாக விளையாட்டு மைதானம், மணப்பாறை மாநில நெடுஞ்சாலையில் குளித்தலை ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடம்பர்கோயிலை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும். குளித்தலை ரயில் நிலையத்தில் புதிய முன்பதிவு மையம் ஏற்படுத்த வேண்டும்.விவசாயம் சார்ந்த புதிய தொழிற்சாலைகள் குளித்தலை நகரில் உருவாக்கப்பட வேண்டும்.

தெப்பக்குள தெருவில் பூங்கா உருவாக்கப்படவேண்டும். நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டி தரப்படவேண்டும். நகராட்சிக்கு புதிய நிரந்தர ஆணையர் நியமிக்கப்பட வேண்டும். கடம்பர் கோயில் காவிரி ஆற்று பகுதியில் புதிய பூங்கா அமைத்து உயர்மின் கோபுர விளக்கு ஆற்றுப்பகுதியில் அமைத்து தர வேண்டும்.மணத்தட்டை பகுதியில் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும்.பேருந்து நிலையத்தில் திருச்சி மார்க்கம் மற்றும் கரூர் மார்க்கம் செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும்.வாரச் சந்தைக்கு தனியாக இடம் கொடுத்து அனைத்து வசதி உடைய வாரச்சந்தை உருவாக்கப்பட வேண்டும். பெரியார் நகரில் நவீன பூங்காவும், சாக்கடை வசதிகளும் செய்து தரப்பட வேண்டும். அண்ணா நகரில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் புதிய பூங்கா அமைத்து தர வேண்டும். குளித்தலை நகரத்திலுள்ள ஒன்றிய அரசு பள்ளிகளை நகராட்சி பள்ளிகளாக மாற்ற வேண்டும்வாழை தொடர்புடைய தொழிற்சாலைகளையும், குளிர்பதனக் கிடங்குகளையும் ஏற்படுத்த வேண்டும்.

குளித்தலை பகுதியில் எந்த தொழில் வளர்ச்சியும் இல்லாததால், அருகிலுள்ள கரூர் மற்றும் திருச்சிக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் தினசரி வேலைக்குச் சென்று வருகின்றனர். குளித்தலைப் பகுதியிலேயே தொழிற்சாலைகளை உருவாக்கி, இங்குள்ள இளைஞர்களுக்கும் மக்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் மற்றும் நகர் நலன் சார்ந்த விஷயங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.மேற்கண்ட அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இதனை மக்களின் கோரிக்கையாக தமிழக அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

Tags : Elections Advisory Meeting ,
× RELATED காங்.சார்பில் உள்ளாட்சி தேர்தல் பணி ஆலோசனை கூட்டம்