×

திருக்காம்புலியூரில் பாசன வாய்க்காலில் தடுப்புச்சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி

கரூர், நவ. 20: திருக்காம்புலியூர் அருகே பாசன வாய்க்கால் பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கரூர் கோவை சாலையில் திருக்காம்புலியூர் பகுதி உள்ளது. இந்த பகுதியின் வழியாக பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த பாசன வாய்க்கால் செல்லும் சாலையோரம் குறிப்பிட்ட பகுதி வரை தடுப்புச் சுவர் இல்லாமல் உள்ளதால் இரவு நேரங்களில் இதன் வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்வதாக கூறப்படுகிறது.

எனவே குறிப்பிட்ட தூரம் வரை தடுப்புச் சுவர் அமைக்கப்பட வேண்டும் என இந்த பகுதியினர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.எனவே அதிகாரிகள் இந்த வாய்க்கால் பகுதியை பார்வையிட்டு வாகன ஓட்டிகள் நலன் கருதி தடுப்புச் சுவர் அமைக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Motorists ,Thirukkambulur ,
× RELATED அருப்புக்கோட்டையில் சாலை ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டுனர்கள் அவதி