சீத்தப்பட்டி பகுதிக்கு செல்லும் குகை வழிப்பாதையில் குடிமகன்கள் அட்டகாசம்

கரூர், நவ. 20: கரூர் திருச்சி பைபாஸ் சாலையில் சீத்தப்பட்டி பகுதிக்கு செல்லும் குகை வழிப்பாதையில் குடிமகன்கள் அட்டகாசத்தால் இந்த பகுதியை கடந்து செல்ல பகுதியினர் அச்சப்பட்டு வருகின்றனர்.கரூர் திருச்சி பைபாஸ் சாலையில் உப்பிடமங்கலம் பிரிவுக்கு முன்னதாக மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் சீத்தப்பட்டிக்கு செல்வதற்கான குகை வழிப்பாதை உள்ளது.இந்த பகுதியில் இரண்டு குகை வழிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு பாதையில் அனைத்து வாகனங்களும் இதன் வழியாக சென்று வருகிறது. இதன் அருகில் மற்றொரு சிறிய அளவிலான குகை வழிப்பாதை உள்ளது. ஆனால்  இதனை யாரும் பயன்படுத்துவதில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இரவு பகல் பாராமல் அடையாளம் தெரியாத பலர், சரக்கு அடிக்கும் நோக்கில், குகை வழிப்பாதையின் உட்புறம் சென்று சரக்கு அடித்து விட்டு பாட்டில்களை அப்படியே உடைத்து விட்டு சென்று விடுவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, பகல் நேரங்களில் கூட பிற வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சர்வீஸ் சாலையின் வழியாக கடந்து செல்ல மிகவும் அச்சப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இது குறித்து இந்த பகுதியினர் சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குகை வழிப்பாதையில் குடிமகன்களின் அட்டகாசத்தை தடுத்து நிறுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Citizens ,area ,Siddapatti ,
× RELATED குடிமக்கள் நுகர்வோர் மன்றம்