×

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில் சேதமடைந்து பயன்படுத்த முடியாத அவல நிலையில் சுகாதார வளாகம்

கரூர், நவ. 20: கரூர் ஆண்டாங்கோயில் கிழக்கு பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றிய பகுதியான ஆண்டாங்கோயில் கிழக்கு பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. தற்போது பல்வேறு காரணங்களால் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் பயன்படுத்திட முடியாத நிலையில் உள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும் இதனை பயன்படுத்தும் வகையில் சீரமைக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். துறை அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள சுகாதார வளாகத்தை பார்வையிட்டு தேவையான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Karur Andango East ,
× RELATED திருவில்லிபுத்தூரில் சுகாதார...