×

கும்பகோணம் ஏஆர்ஆர் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தினவிழா

கும்பகோணம், நவ. 20: கும்பகோணம் ஏஆர்ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் சுப்ரமணியம், செயலாளர் வைத்தியநாதன், அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர் சுகமாலா வைத்தியநாதன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினர். மேலும் பள்ளி கல்வி ஆலோசகர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் தொடக்கநிலை தலைமை ஆசிரியைகள் போன்று மாணவ மாணவிகள் வேடமிட்ட குழந்தைகள் வாழ்த்தி பேசினர். மேலும் கலைநிகழ்ச்சி, ஓவியம், பாட்டு, கோலப்போட்டி, எம்ப்ராய்டரி மற்றும் மாறுவேட போட்டிகள் நடந்தது. மேலும் குழந்தைகள் தினவிழவையொட்டி ஆசிரியர்கள் பட்டிமன்றம் நடத்தி சிறப்பித்தனர். பின்னர் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது

மேலும் ஏஆர்ஆர் எஸ்எல் வித்யாஷ்ரம் பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது. பள்ளி முதல்வர் செல்வி நாகலட்சுமி வரவேற்றார். கல்வி ஆலோசகர் பத்மாசினி மற்றும் மெட்ரிக் பள்ளி தொடக்கநிலை தலைமை ஆசிரியை கண்ணம்மா சிறப்புரையாற்றினர். இதில் ஆசிரியர்கள், மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியை சுமதி தர் நன்றி கூறினார்.


Tags : Children's Day ,Kumbakonam ,ARR Matric School ,
× RELATED குழந்தைகள் தினவிழா