×

பாமக பொதுக்குழு கூட்டம்

பாபநாசம், நவ. 20: பாபநாசம் அருகே வழுத்தூரில் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் வாசுதேவன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் சீனிவாசன், மாவட்ட தொழிற்சங்க தலைவர் சோமு, நகர தலைவர் காளிதாஸ் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலர் உதயசூரியன் வரவேற்றார். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணை பொது செயலாளர் வெங்கட்ராமன், மாவட்ட செயலாளர் சங்கர், மாநில இளைஞரணி விஜயராஜன் ஆகியோர் பேசினர். அய்யம்பேட்டை நகர செயலர் முரளிதரன் நன்றி கூறினார்.

Tags : Bamaka General Committee Meeting ,
× RELATED கிருஷ்ணகிரியில் பாமக பொதுக்குழு கூட்டம்