ஜி.கே.மணி பேட்டி தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு தஞ்சை மாணவிகளின் ஆய்வு கட்டுரை தேர்வு

தஞ்சை, நவ. 20: திருவனந்தபுரத்தில் நடைபெறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தஞ்சை மாவட்ட மாணவிகளின் ஆய்வுக்கட்டுரை தேர்வானது. வேலூர் மாவட்டம் ஆர்க்காடு மகாலெட்சுமி மகளிர் கல்லூரியில் மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு கடந்த 16, 17ம் தேதிகளில் நடந்தது. இதில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 18 ஆய்வு கட்டுரைகள் மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. மாரியம்மன் கோவில் சிஎஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் திரிஷா மற்றும் காயத்ரி ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட மாதவிடாய் விழிப்புணர்வு என்ற ஆய்வுக்கட்டுரை டிசம்பர் 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அகில இந்திய அளவில் நடைபெறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மாநில மாநாட்டில் பங்கேற்று சான்றிதழ் பெற்ற தஞ்சாவூர் மாவட்ட மாணவர்களுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொது செயலாளர் சுப்பிரமணி, மாநில துணைத்தலைவர் சுகுமாரன், மாநில செயலாளர்கள் பாலகிருஷ்ணன், ஸ்டீபன்நாதன், தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் உடனிருந்தனர்.

Related Stories:

>