நெய்வேலி கிராமத்தில் அடிப்படை வசதி செய்து கேட்டு 27ம் தேதி நூதன போராட்டம்

ஒரத்தநாடு, நவ. 20: ஒரத்தநாடு தாலுகாவை சேர்ந்த நெய்வேலி தென்பாதி மற்றும் வடபாதி பகுதியில் இதுவரை போதிய அடிப்படை வசதிகள் செய்யவில்லை. இந்த பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிப்பதுடன் பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தமிழக அரசால் 2018 -2019ம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் திருவோணம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் முள்ளுக்குடிகொல்லை பகுதியில் குடிநீருக்காக ரூ.6 லட்சம் செலவில் ஆழ்குழாய் கிணறு அமைத்து ரூ.10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு குடிநீர் தொட்டி கட்டி இன்று வரை செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. இந்த கிராமத்துக்காக மயான கொட்டகை இல்லை. பழங்கால வழக்கப்படி ஒரு தகர கொட்டகையில் இறந்தவர்களின் இறுதி சடங்குகளை மக்கள் செய்து வருகின்றனர்.

Advertising
Advertising

இதுகுறித்து தஞ்சை கலெக்டரிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வருகிற 27ம் தேதி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ‘கருமாதி’ போராட்டம் சமூக நீதி கழகம் சார்பில் நடத்தப்படும் என்று இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த போராட்டம் குறித்து அந்த பகுதியி–்ல் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

Related Stories: