×

மத நல்லிணக்க கருத்தரங்கம்

தஞ்சை, நவ. 20: தஞ்சையில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மகாத்மா காந்தி 150வது பிறந்த தின மத நல்லிணக்க கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜகோபாலன் வரவேற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஜீவகுமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கோதண்டபாணி கருத்துரையாற்றினர். ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் ஜீவானந்தம் சிறப்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தானந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் பூபதி நன்றி கூறினார்.

Tags :
× RELATED தஞ்சை ரயில் நிலையத்தில் நோ பார்க்கிங்கில் நிறுத்திய 6 பைக்குகள் பறிமுதல்