டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பட்டுக்கோட்டை, நவ. 20: தேசிய மருந்தக தினத்தையொட்டி தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் நகராட்சி மற்றும் ஆவணம் தனியார் கல்லூரி நிறுவன மாணவ, மாணவிகள் இணைந்து நேற்று டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். பட்டுக்கோட்டை அறந்தாங்கி ரோடு முக்கம் காந்தி சிலையிலிருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணியை போலீஸ் டிஎஸ்பி. கணேசமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னாள் நகராட்சி தலைவர் ஜவஹர்பாபு தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் (பொ) பாஸ்கர் முன்னிலை வகித்தார். பேரணியில் தனியார் கல்வி நிறுவன முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை ஏந்தி சென்றனர்.

காந்தி சிலையிலிருந்து புறப்பட்டு மார்க்கெட், பெரியகடைத்தெரு, தலைமை தபால் நிலையம், பெரியத்தெரு, மணிக்கூண்டு, பழனியப்பன் தெரு என நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வந்து பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், பொதுமக்களிடம் டெங்கு காய்ச்சல் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Related Stories: