உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்தகோரி அனைத்திந்திய வங்கி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, நவ. 20: உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்தகோரி தஞ்சையில் அனைத்திந்திய வங்கி ஓய்வூதியர், பணிமூப்படைந்தோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓய்வூதியருக்கான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை சிவகங்கை பூங்கா எதிரில் அனைத்திந்திய வங்கி ஓய்வூதியர், பணி மூப்படைந்தோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை பகுதி செயலாளர் பூமிநாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை திருச்சி மண்டல செயலாளர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியருக்கான உச்சநீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்த வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 100 சதவீதம் பஞ்சப்படியை ஈடு செய்ய வேண்டும்.

குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதமாக உயர்த்தி கொடுக்க வேண்டும். ஊதிய திருத்தம் செய்யும்போது ஓய்வூதியத்தையும் திருத்த செய்ய வேண்டும். புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ காப்பீடு பிரீமியத்தை வங்கியே செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட பொறுப்பாளர் அன்பழகன், ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க பகுதி செயலாளர் குருநாதன், ஊழியர் சங்க துணை பொது செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: