×

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கு உடற்தகுதி தேர்வு

தஞ்சை, நவ. 20: தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று நடந்தது. இதில் தேர்வு பெற்றவர்களுக்கு இன்று சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு ஏற்கனவே முடிந்தது. இதில் தஞ்சாவூர் சேர்த்து உட்பட்ட திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள 1,168 ஆண்களும், 556 பெண்களும் தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து உடற்தகுதி தேர்வு தஞ்சையில் கடந்த 6ம் தேதி துவங்கியது. ஆண்களுக்கு உடல் பரிசோதனை மற்றும் ஓட்டப்பந்தய போட்டிகள் நடந்தது. இந்த தேர்வுக்காக தஞ்சாவூர் சரகத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டனர். மேலும் உடற்தகுதி தேர்வு அனைத்தையும் போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். அதைதொடர்ந்து நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறும் போட்டிகள் நடைபெறும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி அயோத்தி தீர்ப்பையொட்டி அனைத்து போலீசாரும் அந்தந்த மாவட்டங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு சென்றுவிட்டனர். இதனால் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான அடுத்தகட்ட தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது அயோத்தி தீர்ப்பு வெளியாகி பாதுகாப்பு ஏற்பாடுகள் தளர்த்தப்பட்டது. இதையடுத்து ஒத்தி வைக்கப்பட்ட நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறும் போட்டிகள் கடந்த 2 நாட்களாக தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. இந்நிலையில் நேற்று பெண்களுக்கான உடல்தகுதி தேர்வுகள் நடந்தது. இதில் 378 பெண்கள் பங்கேற்றனர். இதில் தேர்வு பெற்றவர்களுக்கு இன்று சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது. இன்று சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த சில நாட்களுக்கு முன் பணிமனைக்குள் சென்ற பேருந்து அங்கிருந்த பள்ளத்தில் மாட்டி கொண்டது. அந்த பேருந்தை மீட்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அரசு போக்குவரத்து விரைவு கழகத்தை கும்பகோணம் நகர் பகுதிக்கு மாற்ற வேண்டும் அல்லது தற்போதுள்ள விரைவு போக்குவரத்து கழக பணிமனையை சீர்படுத்தி சுகாதாரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : police officers ,Tanjore Armed Forces ,
× RELATED தெலங்கானாவில் சந்திரசேகர ராவ்...