×

முசிறி கைகாட்டியில் தொழிற்சங்க மையம் தெருமுனை பிரசாரம்

முசிறி, நவ.20: முசிறி கைகாட்டியில் இந்திய தொழிற்சங்க மையத்தின் பிரசார இயக்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை கண்டித்து தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. முசிறி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை அதன் செயல்பாடுகளை விமர்சித்து நிர்வாகிகள் பேசினர். அப்போது புதிய கல்விக் கொள்கை, எட்டு வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் திட்டம் நீட் தேர்வு உதய் மின் திட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் சிவராஜன், சம்பத் உள்ளிட்ட பலர் பேசினர். ஆட்டோ ஓட்டுநர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Trade Union Center ,Musiri Kaikatti ,
× RELATED குளிர், காற்று, மழை என முக்கோண வானிலை...