×

இளம்பெண்ணிடம் செயின் பறிக்க

முயற்சிதிருச்சி, நவ.20: திருச்சி துவாக்குடி நேரு நகரை சேர்ந்தவர் பிரியங்கா(22). இவர் கே.கே.நகர் அய்யப்ப நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு வேலைக்கு சென்ற அவர், பட்டேல் நகர் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர் அவரிடம் விலாசம் கேட்பதுபோல் கேட்டு அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறிக்க முயன்றார். இதில் சுதாரித்துக்கொண்ட பிரியங்கா, கூச்சலிட்டார். இதனால் மர்ம நபர் தப்பி சென்றார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED மாத்தூர் அருகே கோயில் விழாவில் பெண் தவறவிட்ட 3 பவுன் செயின் ஒப்படைப்பு