வேளாண் பொறியியல் கல்லூரியில் பருப்பு வகைகள் பதன் செய்தல் பயிற்சி

திருச்சி, நவ.20: திருச்சி புள்ளம்பாடி வட்டார பயறுவகை பயிர்கள் சாகுபடி விவசாயிகளுக்கு, குமுளுர் வேளாண் பொறியியல் கல்லூரியில், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் விரிவாக்க சீரமைப்பு உறுதுணை இயக்கத்தின் சார்பில் விவசாயிகளுக்கு பருப்பு வகை பதன்செய்தல் தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் மூல பருப்பு வகைகளை சுத்தப்படுத்துதல் மற்றும் தரம் பிரித்தல், 3 முதல் 5 மணி வரை நீரில் ஊற வைத்தல், ஊற வைத்த பயிருடன் செம்மண் கட்டுதல் அல்லது எண்ணைய் கலந்து வைத்தல், ஈரம் பரவல் மற்றும் சமநிலைக்காக ஒரு இரவு குவியலாக வைத்தல், பின்னர் வெயிலில் உலர்த்தி அல்லது இயந்திர உலர்பானில் இட்டு, தோல் உரித்தல் மற்றும் பருப்பு உடைத்தல், சல்லடைகள் மூலம் சலித்து தரம் பிரித்து சிப்பம் கட்டுதல் பற்றி பருப்பு பதன்செய் இயந்திரங்களை இயக்கி நேரடியாக விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.

புள்ளம்பாடி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மோகன், வேளாண் பொறியியல் கல்லூரி முதல்வர் திருப்பதி, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சகுந்தலை, வேளாண் விளைப்பொருட்கள் பதன்செய்தல் மற்றும் உணவு பொறியியல் துறை உதவி பேராசிரியை பர்வீன், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வட்டார தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன், அட்மா திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் பிரதமரின் பயிர் காப்பீட்டுத்திட்டங்களை பற்றி பேசினார். இந்த பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர்கள் பிரின்ஸி, ரகுபதி, தயாநிதி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தமிழ்மணி, தினேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>