×

தொடக்க பள்ளியில் 72 இடங்களுக்கான தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு கலந்தாய்வு

திருச்சி, நவ.20: திருச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்கல்வி தலைமையாசிரியர்களுக்கான பணி இடமாற்றம், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். 4 கல்வி மாவட்ட அதிகாரிகள் முன்னிலையில் காலையில் பணியிட மாறுதல்களுக்கான கலந்தாய்வில் மாவட்டத்திலிருந்து 72 தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். பின்னர் மாலையில் நடந்த 72 இடங்களுக்கான தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடந்தது. இதில் 118 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அதில் 72 பேர் உரிய இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

Tags : consultation ,headmaster ,elementary school ,places ,
× RELATED பணிமாறுதல் கலந்தாய்வு நடத்த கோரிக்கை