திருச்சியில் 2வது நாளாக பெண் போலீஸ் உடல் தகுதியில் 364 பேர் தேர்வாகினர்

திருச்சி, நவ.20: திருச்சியில் 2ம் நிலை பெண் காவலர்களுக்கான 2வது நாள் உடல் தகுதி தேர்வில் 364 பேர் தேர்வாகினர்.தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2ம் நிலை காவலர்கள், தீயணைப்புத்துறை பணிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தேர்வு நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கு நடத்தப்பட்ட 3 நாட்கள் தேர்வில் மொத்தம் 1,705 பேர் தேர்வாகினர். பெண்களுக்கான காவலர் தேர்வு 9ம் தேதி நடக்க இருந்தது.

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில் பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. அந்த தேர்வு நேற்று திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று 2ம் நாளாக நடந்தது. 2வது நாளில் 553 பெண்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதில் 507 பேர் கலந்துகொண்டனர். சான்றிதல் சரிபார்ப்பு, உயரம் மற்றும் ஓட்டம் நடத்தப்பட்டதில் 364 பேர் தேர்வாகினர். திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன், பெரம்பலூர் எஸ்பி நிஷாபார்த்திபன் ஆகியோர் மேற்பார்வையில் தேர்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து மாநகர கமிஷனர் அமல்ராஜூம் தேர்வை பார்வையிட்டார்.

Related Stories:

>