×

பள்ளிக்கு 4 கி.மீ நடைபயணம் செல்லும் மாணவர்கள் ஆதரவற்ற நிலையில் பிள்ளைகளுடன் கஷ்டப்படுறேன்... அரசு வேலை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளி விதவை மனு

விருதுநகர், நவ. 20: விருதுநகர் அருகே, மீசலூரைச் சேர்ந்த சத்தியபாமா தனது இரண்டு மகன்களுடன் நேற்று முன்தினம் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: விவசாய குடும்பத்தில் பிறந்த நான் சிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டேன்; சிரமப்பட்டு பி.காம், பிஜிடிசிஏ, தமிழ், ஆங்கிலத்தில் டைப்பிங் முடித்துள்ளேன். எனது கணவர் கடந்த 2017 விபத்தில் உயிரிழந்தார். 13 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களை அரசு பள்ளியில் படிக்க வைத்துள்ளேன். கணவர் இறந்து 3 வருடங்களாகியும் விதவை பென்ஷன், மாற்றத்திறனாளிக்கான உதவித்தொகை மற்றும் அரசு வேலை எதுவும் கிடைக்கவில்லை.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 20 ஆண்டுகளாகிறது. சத்துணவு பணிக்கான நேர்காணல் வந்தும் வேலை வழங்கவில்லை. மாற்றுத்திறனாளி, விதவை என இரண்டு முன்னுரிமை இருந்தும் வேலை கிடைக்கவில்லை. இரண்டு பிள்ளைகளுடன் வறுமையில் வாடுகிறேன். கூலி வேலை செய்து படிக்க வைத்து வருகிறேன். ஆதரவற்ற நிலையில் இருக்கும் என்னையும் எனது குழந்தைகளை காப்பாற்ற படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லையென்றாலும் துப்புரவு பணியாளர் வேலையாவது வழங்க வேண்டும். ஏதாவது ஒரு வேலை இல்லை என்றால் குழந்தைகளை காப்பாற்ற முடியாமல், உயிர் விடுவதை தவிர வேறு வழியில்லை’ என தெரிவித்துள்ளார்.

Tags : walk ,school ,children ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...