×

குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேக்கம் நடவடிக்கை எடுக்கக்கோரி கப்பல் விடும் போராட்டம்

திருவில்லிபுத்தூர், நவ. 20: திருவில்லிபுத்தூரில் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கப்பல் விடும் நூதன போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெப்பச்சலனம் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் திருவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குடியிருப்பு பகுதியில் போதிய வடிகால் வசதியில்லாமல் மழைநீரோடு, கழிவுநீரும் சேர்ந்து தேங்குகிறது. திருவில்லிபுத்தூர் பேச்சியம்மன் கோயில் தெருவில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை வெளியேற்ற திருவில்லிபுத்தூரில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறுகின்றனர்.

இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பேச்சியம்மன் கோவில் தெருவில் தேங்கியுள்ள மழைநீரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காகித கப்பல் விடும் போராட்டத்தை நேற்று நடத்தினர். நகரச் செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட குழு திருமலை, நகர் குழு ரேணுகாதேவி, கிளைச் செயலாளர்கள் செல்வம் மற்றும் அங்குராஜ் உட்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். அப்போது, ‘குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் மற்றும் கழிவுநீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

Tags : area ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...