×

உள்ளாட்சி தேர்தல் காங்கிரஸ் நிர்வாகிகள் விருப்பமனு தரலாம்

காரைக்குடி, நவ.20: காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர், தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளதாவது: காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி, பேரூராட்சி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர் பதவி, ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் காங்கிரஸ் தொண்டர்கள் தங்களது விருப்ப மனுவை வரும் 21, 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் காரைக்குடி சுப்பிரமணியபுரம் முதல்வீதியில் உள்ள எம்.பி அலுவலகத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் எஸ்.மாங்குடி, வழக்கறிஞர் கணேசன், பொருளாளர் பழனியப்பன் ஆகியோரிடம் வழங்கலாம். சிவகங்கை, மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் சிவகங்கை கோகலே ஹால் தெருவில் உள்ள எம்.பி அலுவலகத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரெத்தினம், மாவட்ட துணைத்தலைவர் வெள்ளைச்சாமி ஆகியோரிடம் வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.

Tags : election ,executives ,
× RELATED சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள 70...