×

சீரமைக்க வலியுறுத்தி சாலையில் நாற்றுநட்ட பொதுமக்கள்

காரைக்குடி, நவ.20: காரைக்குடியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் நாற்றுநடும் போராட்டம் நடத்தினர். காரைக்குடி என்ஜிஓ காலனி ஆர்ச் முதல் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரை உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்து உள்ளது. இதை சரி செய்ய சங்கராபுரம் ஊராட்சி மன்ற அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே நேற்று காலை பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதில் சங்கராபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாங்குடி, சமூக ஆர்வலர் ஆதிஜெகனாதன், முன்னாள் சாக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் சொக்கு மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

Tags : Public ,road ,
× RELATED மாட்டு கொட்டகையான சாம்ராஜ் வீதி...