×

திருப்புவனத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம்

திருப்புவனம் நவ.20: திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு, ஆயில் இஞ்சின், நுண்ணீர் பாசனம் போன்றவை அமைக்க தோட்டக்கலை துறை மூலம் மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் பாண்டியராஜன் கூறியிருப்பதாவது: திருப்புவனம் வட்டாரத்தில் நுண்ணீர் பாசனத் திட்டத்தை ஊக்குவிப்பதற்காக விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரமும், மின் மோட்டார் அல்லது ஆயில் இஞ்சின் கொள்முதல் செய்வதற்கு ரூ.15 ஆயிரமும் 130 க.மீ தண்ணீர் தொட்டி அமைக்க ரூ.40 ஆயிரமும் கூடுதலாக மானியம் வழங்கப்படுகிறது.

வெங்காயம், வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பின் ஏற்பு மானியம் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது. உயர் விளைச்சல் தரக்கூடிய தக்காளி, கத்தரி, மிளகாய் நாற்றுகளும் வெண்டை விதைகளும் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. காய்கறி சாகுபடி மற்றும் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது ரேசன் கார்டு, ஆதார் கார்டு, பட்டா, அடங்கல், நில வரைபடம், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Deepwater ,
× RELATED 50% மானியத்தில் உளுந்து விதை, உயிர் உரங்கள்