×

மனைவி சண்டை; கணவர் தற்கொலை

மானாமதுரை, நவ.20: மானாமதுரையில் மனைவி கோபித்துக்கொண்டு தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மானாமதுரை ஆதனூர்ரோடு கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பூமி (45). பூமிக்கும் அவருடைய மனைவிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதையடுத்து மனைவி கோபத்தில் தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். மனமுடைந்த பூமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததை அடுத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் மானாமதுரை போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED கணவர், குழந்தைகள் அடுத்தடுத்து இறந்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை