×

சிறுமிக்கு தொந்தரவு வாலிபருக்கு வலை

மானாமதுரை, நவ.20: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்புவனத்தை சேர்ந்த சிறுமி சங்கீதா(17, பெயர் மாற்றப்பட்டுள்ளது.). இவர் பள்ளியில் படிக்கும் போது வாவியரேந்தல் கிராமத்தை சேர்ந்த கார்த்திக்(21) உடன் பழக்கம் ஏற்பட்டது. சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது கார்த்திக் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதை அறிந்த பெற்றோர் சங்கீதாவை கேரளாவில் உள்ள பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சிறுமி கேரளா சென்றதை அறிந்த கார்த்திக், அங்கு சென்றும் பாலியல் ரீதியாக மிரட்டியுள்ளார். கார்த்திக் மீது கேரளாவில் உள்ள மாராடு காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அங்கு வழக்கை பதிவு செய்த கேரள போலீசார் மேல்நடவடிக்கை எடுக்குமாறு மானாமதுரை டிஎஸ்பிக்கு எப்ஐஆர் குறிப்பை அனுப்பி வைத்தனர். மானாமதுரை டிஎஸ்பி கார்த்திகேயன் உத்தரவின்படி மானாமதுரை மகளிர் காவல்நிலைய போலீசார் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags : girl harassment youngster ,
× RELATED ரோட்டில் நடந்து சென்ற பெண் ஜோதிடரிடம் செயின் பறிப்பு ஆசாமிக்கு வலை