×

விவசாயிகள் பயிர்காப்பீடு செய்ய நவ.30 கடைசி நாள் விழிப்புணர்வு கூட்டத்தில் தகவல்

திருவாடானை, நவ.20: வரும் 30ம் தேதிக்குள் அனைத்து விவசாயிகளும் பயிர்காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாடானை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான பயிர் இன்சூரன்ஸ் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் செல்வம் கலந்துகொண்டு பேசுகையில், ‘‘திருவாடானை வட்டாரத்தில் சம்பா பட்டத்தில் 26 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து விவசாயிகளும் பயிர் இன்சூரன்ஸ் செய்ய வேண்டும். இந்த ஆண்டு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.357.75 பிரீமியமாக செலுத்த வேண்டும். பயிர் காப்பீடு செய்ய வரும் 30ம் தேதி கடைசி நாளாகும். கடைசி தேதிக்குள் அந்தந்த பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வணிக வங்கிகள் பொது இ.சேவை மையங்கள் ஆகிய இடங்களில் பயிர்காப்பீடு செய்து கொள்ளலாம்’’ என்று பேசினார். இதில் வேளாண்மை அலுவலர்கள் வட்டார தொழில்நுட்ப மேலாளர் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Farmers Crop Awareness Meeting ,
× RELATED தமிழகத்தில் நவம்பர் மாதத்தில்...