×

கண்மாய்க்கு நீர் திறக்கக்கோரி மனு

சிவகங்கை, நவ.20: திருப்புவனம் அருகே டி.வேலாங்குளம், திருப்பாசேத்தி தெற்கு கண்மாய்க்கு வைகை நீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. கலெக்டர் ஜெயகாந்தனிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்டத் தலைவர் ஜெயராமன் மற்றும் நிர்வாகிகள், கிராமத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: டி.வேலாங்குளம், திருப்பாச்சேத்தி தெற்கு கண்மாயில் வைகை பாசனம் உள்ளது. இதை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாயம் செய்யப்படுகிறது. ஆனால் இக்கண்மாய்களுக்கு வைகை பாசன நீர் திறக்கப்படுவதில்லை. நீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே இக்கண்மாய்களுக்கு வைகை நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED குடிநீர் இணைப்புக்கு மனு