×

கமுதியில் கொட்டி தீர்த்த மழை

கமுதி, நவ.20:  கமுதியில் நேற்று முழுவதும் மழை கொட்டித்தீர்த்ததில் பொதுமக்கள், மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். கமுதியில் நேற்று காலையில் இருந்து மழை விட்டு விட்டு பெய்தது. மழை அறிவிப்பு இருந்தும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லாததால் மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாயினர். கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கமுதியில் உள்ள பள்ளிகளுக்கு வந்து படிக்கின்றனர். மழையிலேயே நனைந்து கொண்டு பள்ளிக்கு சென்றனர். பின்னர் பள்ளி முடியும் நேரத்தில் அவரவர் ஊர்களுக்கு செல்ல மழையில் நனைந்து கொண்டு பேருந்துகளை பிடிப்பதற்கு சென்றனர்.

பொதுமக்களின் அன்றாட பணிகளும் தடைபட்டன. நேற்று கமுதியில் வாரச்சந்தை ஆகும். தொடர்ந்து மழை பெய்ததால் காய்கறிகள், பழங்கள், மீன், மற்றும் பல்வேறு வியாபாரிகள் பொதுமக்கள் சரிவர வராததால் வியாபாரம் பாதிப்படைந்ததாக வருத்தத்துடன் கூறினர். தொடர் மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் தான் விவசாயம் நன்றாக இருக்கிறது என்று கூறினர்.
கீழக்கரையில் சில பகுதிகளில் மழை பெய்ததால் மழை நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி கிடைக்கின்றன. இதுபோன்று வடக்குத்தெரு சி.எஸ்.ஐ. நடுநிலை பள்ளி அருகில் உள்ள  வீட்டுக்குள் பகுதியில் மழைநீர் செல்லும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதியில் பள்ளிக்குச் செல்லும் மாணவ,மாணவிகள் அவ்வழியே செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அப்பகுதியில் மழைநீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி இதுபோன்ற நிலை ஏற்படுகின்றன. இதனை நகராட்சி நிர்வாகம் சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை