×

தமுக்கம் மைதானத்திற்கு வஉசி பெயர்

மதுரை, நவ. 20: மதுரை அமுதசுரபி கலைமன்றம் சார்பில், சுதந்திர வீரர் வஉ.சிதம்பரனார் நினைவு தினக்கூட்டம் நேற்று நடந்தது. மன்ற தலைவர் பாலகிருட்டிணன் தலைமை வகித்து, வஉசி படத்திற்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து நிர்வாகிகள் சிவசங்கரகுமார், புலவர் சங்கரலிங்கம் மற்றும் ஆண்டாள்புரம் தியாகராசர் பள்ளி மாணவர்கள் வஉசி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாணவர்களுக்கு `வஉ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு’ புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து வ.உ.சிதம்பரனாரை கவுரவிக்கும் விதமாக, மதுரை தமுக்கம் மைதானத்திற்கு `வஉசி மைதானம்’ பெயர் வைக்கும்படி தமிழக அரசையும், மதுரை மாநகராட்சி நிர்வாகத்தையும், கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செயலாளர் கந்தசாமி நன்றி கூறினார்.

Tags : Wausi ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்