மனைவி பிரிந்ததால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

பழநி, நவ.20: பழநியில் மிட்டாய் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பழநி டவுன், நடுத்தெருவைச் சேர்ந்தவர் நடராஜ் (57). மிட்டாய் வியாபாரி. 1 மகன் உள்ளார். 1 வருடத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி கோபித்து கொண்டு மகனுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அதுமுதல் வாழ்க்கையில் வெறுப்படைந்து இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழநி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Dealer ,suicide ,
× RELATED புதையல் ஆசையில் வீட்டுக்குள் 20 அடி...