×

இந்திரா காந்தி பிறந்தநாள் விழா காங்கிரசார் கொண்டாட்டம்

திண்டுக்கல், நவ. 20: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் காங்கிரஸார் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள்  பிரதமர் இந்திரா காந்தியின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல்  மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் கட்சி அலுவலகத்தில்  இந்திராகாந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் துணைத்தலைவர்கள் அரபுமுகமது,  ஜபருல்லா, மண்டல தலைவர்கள் ரகுமான், தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைத் தலைவர் ராஜாஜி, பொதுக்குழு  உறுப்பினர்கள் சிவாஜி, ஜோதிராமலிங்கம், மாநகர சிறுபான்மை பிரிவு தலைவர்  காஜாமைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து திண்டுக்கல்  பேருந்து நிலையத்தில் மாவட்ட சேவாதள தலைவர் ஜாஹிர் உசேன் தலைமையில்,  முன்னாள் எம்எல்ஏ தண்டபாணி கட்சி கொடியை ஏற்றி, இந்திராகாந்தியின்  படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர்கள் வின்சென்ட், அப்துல்  ஜப்பார், மார்ட்டின், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் முருகேசன், முன்னாள்  செய்தி தொடர்பாளர் ரவி சுப்பிரமணி, மாநகர மாவட்ட துணை தலைவர் பொட்டு  செல்வம், மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிகண்டன், பொதுச்செயலாளர்  ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Congress Celebration ,Indira Gandhi ,
× RELATED இந்திரா காந்தி பிறந்த நாள் விழா