திண்டுக்கல் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை பயிற்சி முகாம்

திண்டுக்கல், நவ. 20: திண்டுக்கல் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் செட்டிநாயக்கன்பட்டி கிராமம், கள்ளிப்பட்டியில் செலவில்லா இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி விவசாயிகளுக்கு நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நாகேந்திரன் தலைமை ஏற்று, வேளாண்மைதுறை பயிற்சியும், கூட்டு பண்ணை திட்டம் மற்றும் விலை பொருட்களை சந்தைப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் போன்ற செயல்பாடுகள் மூலமாக அதிகமாக லாபம் ஈட்ட முடியும் என்பதை விளக்கினர். மேலும் மக்காச்சோள படைபுழு தாக்குதலுக்கு உள்ளான விளைநிலங்களில் கட்டுப்பாட்டு முறைகளை கையாளுதல் தொடர்பாகவும், தண்ணீர் பாசனம் மூலம் நீர் மேலாண்மை செய்து குறைவான நீரில் அதிக மகசூல் பெறுதல் தொடர்பான ஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு வழங்கினார்.

இதையடுத்து எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் முதுநிலை அறிவியலாளர் செல்வ முகிலன் பஞ்சகாவியம், அமிர்த கரைசல், திறன்மிகு நுண்ணுயிரி கரைசல், தஸகாவியா, வேர்உட்பூசணம் மற்றும் கழிவுகளை மட்க வைக்கும் இயற்கை பொருட்களை கொண்டு செலவில்லா வேளாண்மை மேற்கொள்ளும் தொழில்நுட்பங்களை விளக்கி கூறினார். இம்முகாமில் கலந்துகொண்ட 2 விவசாயிகளுக்கு விவசாய கருவிகள் வழங்கப்பட்டன.

Related Stories: